உடல் எடை அளவாக இருந்தால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம். அதற்கு முட்டை பெரிதும் உதவுகிறது.
முட்டையை எப்போது சாப்பிட வேண்டும்?
உடல் பருமனாக உள்ளவர்கள், காலை உணவாக இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வு
இது குறித்த அமெரிக்க ஆய்வில், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிடுவதால், உடல் எடையை அதிகரிக்கும் கலோரிகளின் அளவு குறையும்.
இம்முறையை பின்பற்றுவதால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
நன்மைகள்
- காலை உணவாக 2 முட்டைகளை மட்டும் சாப்பிடுவதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.
- தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறைகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறியுள்ளது.