வாரம் இருமுறை பாகற்காய் சாப்பிடுங்கள்: என்ன நடக்கும்?

Report Print Printha in ஆரோக்கியம்

பாகற்காயில் விட்டமின் A, B, C, பீட்டா-கரோட்டின், ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே பாகற்காயை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • பாகற்காயை ஜூஸில் தேன் கலந்து, வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால், அது ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • பாகற்காயில் ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், நம் உடலின் ஆற்றல் அதிகரிப்பதுடன், உடல் வலிமையும் அதிகரிக்கும்.
  • உணவில் அடிக்கடி பாகற்காயை சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்க் கிருமிகளிடமிருந்து நம் உடலை பாதுகாக்க உதவுகிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தாலே நல்ல பலனைக் காணலாம்.
  • பாகற்காய் செரிமான பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் அளிப்பதோடு, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க உதவுகிறது.
  • பாகற்காய் ஜூஸில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments