வெறும் வயிற்றில் எலுமிச்சை பழச்சாறு குடிக்க வேண்டாம்: பக்கவிளைவு உள்ளது!

Report Print Printha in ஆரோக்கியம்

காலையில் எழுந்ததும் அமிலத்தன்மை நிறைந்த எலுமிச்சை பழச்சாற்றை நீரில் கலந்து குடிப்பதால், ஏராளமான உடல்நலக் குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.

எலுமிச்சை சாற்றை குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?

  • எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை பாதித்து, பற்கூச்சம் போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.

  • வெறும் வயிற்றில் எலுமிச்சை பழச்சாறு குடித்தால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதுடன், அதை தொடர்ந்து நெஞ்சில் வலி ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

  • ஆசிட் நிறைந்த எலுமிச்சை பழச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால், ஜீரணப் பிரச்சனை, Gastroesophageal reflux disorder (GERD) எனும் குறைபாட்டால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்ககூடும்.

  • உடல் எடை குறைப்பதற்காக, காலையில் எலுமிச்சை பழச்சாற்றை குடிப்பது மிகவும் தவறானது. இதனால் எடை குறைந்தாலும் வயிற்றில் அசிடிட்டி அதிகரித்து, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

  • விட்டமின் C நிறைந்த லெமன் ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, அதிகமாக வெளியேற்றப்படும் சிறுநீருடன் நம் உடலிலுள்ள சோடியம் சத்துக்களும் நீங்கி, மயக்கம் மற்றும் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  • எலுமிச்சைப் பழத்தில் உள்ள ஆக்ஸலேட்ஸ், இயற்கையாக நமது உடலில் உள்ளது. எனவே லெமன் ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, நம் உடலில் ஆக்ஸலேட்ஸ் அதிகரித்து, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

குறிப்பு

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரையோ அல்லது சூடான நீரையோ குடிக்கக் கூடாது. டயட்டில் எலுமிச்சை பழச்சாற்றை உணவுக்குப் பின் குடிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments