சீரகத்தை அதிகம் சாப்பிடாதீங்க..! அதன் விளைவுகள் ஆபத்தானது

Report Print Printha in ஆரோக்கியம்

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மசாலா உணவு வகையை சேர்ந்த சீரகத்தை அதிகமாக சாப்பிடும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சீரககத்தை மென்று சாப்பிடக் கூடாது ஏன்?

சிலர் வெறும் சீரகம் தண்ணீரை அதிகமாக குடிப்பார்கள், இதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள், இது முற்றிலும் தவறான ஒரு முறையாகும்.

ஏனெனில் இதிலுள்ள காரத்தன்மை உடல் நலத்திற்கு, மிகப்பெரிய தீங்கை விளைவிக்ககூடியதாகும்.

சீரகத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
  • சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
  • சீரகத்தை சாப்பிட்டால் அடிக்கடி ஏப்பம் வரும். நீண்ட நாட்கள் அதை பின்பற்றினால், சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாகி, அது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால், கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு, குறைப் பிரசவம், வயிற்று உப்பிசம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டால் அது ரத்தப்போக்கை அதிகமாக்கி விடும். எனவே சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
  • சீரகம் ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments