தினம் மூன்று முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Meenakshi in ஆரோக்கியம்

உடல்நலத்தினை ஆரோக்கியமாக நாம் வைத்து கொள்வதற்கு பல்வேறு உணவு முறைகளை பின்பற்றுவோம். முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்வோம்.

நம் அன்றாட உணவில் முக்கிய பங்கினை வகித்து உடலுக்கு தேவையான சத்துக்களை தருவது முட்டை. தினசரி நமது காலை உணவில் மூன்று முட்டைகளை சேர்த்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த இயலும்.

ஒரு முட்டையில் 180-186 மிகி வரையிலான கொழுப்பானது உள்ளது இதனால் முட்டையினை தினசரி சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காது.

தினசரி நமது கல்லீரலானது 1000-2000 மிகி அளவிலான கொழுப்பினை உற்பத்தி செய்கிறது.

முட்டையில் விட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளதால் இது எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகப்படுத்துகிறது.

மேலும் முட்டையில் ரிபோபிளேவின், இரும்பு, செலினியம், மக்னீசியம், விட்டமின் ஏ, ஈ மற்றும் பி6 ஆனது உள்ளது.

எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாது உடலில் தடை வளர்ச்சியினை அதிகரிக்கிறது. இரண்டு முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் அதிகளவு புரோட்டீன் போன்ற சத்துக்களை பெறலாம்.

முட்டையில் உள்ள லுடெயின் மற்றும் செனாத்தின் கண்களில் காட்ராக்ட் போன்ற கண் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விட்டமின் ஏ ஆனது இரவில் ஏற்படும் பார்வை குறைபாட்டினை தவிர்க்க பயன்படுகிறது.

இதில் அதிகளவு விட்டமின்கள், கலோரிகள் மற்றும் புரோட்டீனானது பசியினை உள்ளதால் உடல் எடையினை குறைக்க உதவுகிறது.

தினசரி காலை உணவில் முட்டையினை சேர்த்து கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments