பால் குடித்தால் சளி பிடிக்குமா?

Report Print Printha in ஆரோக்கியம்

பால் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். ஆனால் அத்தகைய பாலை எப்படி குடிப்பது சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலில் உள்ள சத்துக்கள் என்ன?

பாலில் கொழுப்புச்சத்து, புரதம், தண்ணீர், தாதுக்கள், குறைவான சர்க்கரை, 64 வகைக் கொழுப்பு அமிலங்கள், சிறிதளவு பாஸ்போ லிபிட், கரோட்டினாய்டு போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

பாலில் குளுகோஸ், கேலக்டோஸ் எனும் சர்க்கரைகளின் கலவை உணவுச் செரிமானத்துக்கு மிகவும் அவசியமான ஒரு சர்க்கரைப் பொருளாக உள்ளது.

மேலும் பாலில் விட்டமின் A, B1, B2, C, D, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளது.

பாலை எப்படி குடிப்பது நல்லது?

பால் ஒரு சத்துப்பொருள் என்றாலும், அது பல வகை பாக்டீரியா வளர்வதற்கான சிறந்ததொரு ஊடகமாகவும் உள்ளது.

எனவே பால் குடிப்பதற்கு முன் அதை நன்றாக கொதிக்கவைத்து, ஆறவைத்து குடித்தால் எந்த ஆபத்துக்களும் வராது.

பால் குடிப்பதால் சளி பிடிக்குமா?

பாலை 100.2 டிகிரி செல்சியஸ் என்ற கொதிநிலையில் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்தால், அந்த பாலில் உள்ள அனைத்து பாக்டீரிக்களுமே இறந்துவிடும்.

எனவே பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால், சளி பிடிப்பது மற்றும் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

விலங்கினப் பால் குடிப்பது ஆபத்தா?

விலங்கினப் பால்களில் காசநோய்க் கிருமிகளும் டைபாய்டு கிருமிகளும் இருக்குமானால், அந்தப் பாலைக் காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு இந்த இரண்டு நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?

பால் குடிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகள் இருக்கும். எனவே அவர்கள் பால் குடித்தால், வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகல், தும்மல், இருமல், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments