இது தெரிந்தால் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க

Report Print Printha in ஆரோக்கியம்

சமையலில் பயன்படுத்தும் காய்கறி வகையை சேர்ந்த வெங்காயத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஒரு விஷயம்.

ஆனால் வெங்காயத்தை போன்றே அதனுடைய தோலிலும் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

வெங்காயத் தோலில் உள்ள சத்துக்கள்

  • வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளது.

  • வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

நன்மைகள்

  • வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

  • வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள், கொலஸ்ராலைக் கரைத்து, உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெங்காயத் தோலை எப்படி உட்கொள்ளலாம்?

வெங்காயத் தோலை டீ செய்து குடிக்கலாம். முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு

வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments