தக்காளி சோஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? அதிர்ச்சி தகவல்

Report Print Meenakshi in ஆரோக்கியம்

பாஸ்ட் புட் கடைகள் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை தற்போது அனைத்து இடங்களிலும் தக்காளி சோஸ் அனைத்து பாஸ்ட் புட்களுக்கும் வழங்கப்படுகிறது.

தக்காளி சாஸினை அந்த உணவுகளுக்கு உபயோகித்து உண்ணும் போது சுவையினை அதிகமாக்குகிறது. ஆனால் தக்காளி சோஸில் சேர்க்கப்படும் பொருள்களால் ஏற்படும் பின் விளைவுகள் மிக அதிகம்.

சர்க்கரை

ஒரு ஸ்பூன் தக்காளி சோஸில் 4கிராம் அளவிற்கு சர்க்கரையானது உள்ளது. இந்த அதிகப்படியான சர்க்கரை நம் உடலுக்கு அதிக கேடு விளைவிக்கிறது. சர்க்கரையின் அளவினை அதிகரிக்கிறது.

அதிகப்படியான ப்ரூக்டோஸ்

சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாகானது தக்காளி சோஸில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள அதிகப்படியான ஃப்ரூக்டோஸானது சர்க்கரையினை விட அதிகளவில் தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும். இது நேரடியாக மூளையினை பாதிக்கும் தன்மையுடையது.

கலோரிகள்

தக்காளி சோஸினை தயாரிக்கும் போது தக்காளியானது மிக அதிக வெப்பத்தில் அதிக நேரம் வேகவைக்கப்படுவதால் இதில் உள்ள அனைத்து சத்துக்கள் கலோரிகள் அழிக்கப்பட்டு எவ்வித சத்துக்களையும் அளிப்பது இல்லை.

மோனோசோடியம் குளுடாமேட்

MSG என்று அழைக்கப்படும் மோனோசோடியம் குளுடாமேட் ஆனது தக்காளி சாஸில் சுவையினை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. மேலும், இதனை பதப்படுத்துவதற்காக அதிகப்படியான சேர்க்கப்படும் வினிகர் வேதி பொருள்கள் உடலுக்கு தீங்கினை விளைவிக்கிறது.

சோடியம்

8 ஸ்பூன் தக்காளி சோஸில் நம் ஒரு நாளுக்கு தேவையான சோடியமானது அடங்கியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவற்றை நமது உணவில் நாம் அதிகப்படியாக சேர்க்கும்போது உடல் நலத்தினை கெடுக்கிறது.

சில சமயங்களில் தயாரிக்கப்படும் இடங்களில் உள்ள சுகாதாரமின்மை கூட உடலுக்கு நோயினை உண்டாக்குகிறது. இவற்றை எல்லாம் தடுக்க நமது வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரித்து பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments