பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்

Report Print Meenakshi in ஆரோக்கியம்

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது என பெரியோர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

பேரிச்சம் பழத்தினை சாப்பிடுவதால் இரும்பு சத்து அதிகரிக்கப்பட்டு இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படும் .

ஆனால் தொடர்ந்து பேரிச்சம் பழத்தினை உண்பது நல்லதல்ல என உணவியலாளர்களால் கூறப்பட்டுள்ளது.

தினமும் பேரிச்சம்பழத்தினை உட்கொள்வதால் அதிலுள்ள குளுகோஸானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க செய்கிறது.

  • உலர்ந்த பேரிச்சம்பழத்திலுள்ள அதிகளவு கலோரியானது உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது. எனவே டயட்டில் இருப்பவர்கள் பேரிச்சம்பழத்தினை தவிர்ப்பது நலம்.
  • பேரிச்சம்பழத்தில் அதிகளவில் பைபரானது உள்ளது. ஒருநாளைக்கு நமது உடலில் 20லிருந்து 35 கிராம் மட்டும் பைபர் தேவைப்படும். இதன் அளவு அதிகமாகும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
  • சில சமயங்களில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான பைபரானது வயிற்றுப்போக்கினை உண்டாக்குகிறது. மேலும் இதில் உள்ள ப்ளூருக்டோஸ் வாயு தொல்லையினை உண்டாக்கும்.
  • உலர்பேரிச்சம் பழத்தில் அதிகமாக உள்ள Histamine சிலருக்கு அலர்ஜியினை கூட உண்டாக்கும்.
  • சில நேரங்களில் பல் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments