பட்டினி கிடந்தால் மட்டும் உடல் எடை குறையாது

Report Print Santhan in ஆரோக்கியம்

உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது. எடையை குறைக்க சில எளிய வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.

உடல் பருமனை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் மேற்கொள்ளும் பழக்கம் உணவுக்கட்டுப்பாடு. வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டின் அளவை குறைத்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார்கள்.

ஒருசிலர் பட்டினியும் கிடப்பார்கள். இது தவறான பழக்கம். பட்டினி கிடந்தோ, சாப்பாட்டு அளவை குறைத்தோ எடையை குறைக்க முயற்சிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தராது.

  • உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது முக்கியமல்ல. என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். கொழுப்புச்சத்து, அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.
  • அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் பச்சைக்காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்கும்.
  • தினமும் மூன்று வேளைதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக 6-7 முறைகூட உணவை பிரித்து சாப்பிட்டு வரலாம். சாப்பிட்ட உடனே உட்கார்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கக்கூடாது. சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். டீ, காபி குடிப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் பருகுவதும் உடல் எடையை குறைக்க உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments