உணவு சாப்பிட்டதும் டீயை குடித்து விடாதீர்கள்! ஆபத்து

Report Print Printha in ஆரோக்கியம்

ஆயுர்வேத முறைப்படி அன்றாடம் நம்முடையை உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

உணவு சாப்பிட்ட பின் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன?

  • உணவு சாப்பிட்ட பின் சிலர் செரிமானம் அடைவதற்கு டீயை குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், அது அஜீரணக்கோளாறை ஏற்படுத்திவிடும்.

  • உணவை உட்கொள்ளும் போது, ஜூஸ் குடிக்கும் பழக்கம் மிகவும் மோசமானது. ஏனெனில் அது நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள் மற்றும் செரிக்க உதவும் நொதிகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

  • தயிருடன் எண்ணெய் பலகாரங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.

  • ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்களை ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அது உடலில் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கச் செய்து, பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

  • உணவு சாப்பிட்ட பின் இனிப்புகளாஇ சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்தி, செரிமானமானப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  • மட்டனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் விலங்கு புரோட்டீனுடன், கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்து சாப்பிடும் போது, வயிற்றில் செரிமான அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கப்பட்டு, அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

  • உணவுக்குப் பின் பழங்கள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உடலில் நீண்ட நேரம் சர்க்கரை நீடிக்க வைப்பதுடன் செரிமானமின்மையை ஏற்படுத்தும்.

  • உணவுக்கு பின் நீரை வயிறு நிறைய குடிக்கக் கூடாது. குறைந்தது 1/2 மணி நேரம் இடைவெளி விட்டு குடிப்பது நல்லது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments