இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Report Print Raju Raju in ஆரோக்கியம்

தலைவலி, ஜலதோஷம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளாமல் சில எளிய மசாஜ்கள் செய்வதன் மூலம் கூட அதை சரி செய்ய முடியும்

30 நொடிகளிலிருந்து 1 நிமிடம் வரை இதை செய்தாலே போதும் உடனடி பலன் கிடைக்கும்.

முதல் வழி

கண்களின் இரண்டு புருவத்துக்கு நடுவில் இருக்கும் நெற்றி பொட்டில் கை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குறையும். அதனுடன் கண்ணில் ஏற்ப்படும் சோர்வும் சரியாகும்.

இரண்டாம் வழி

கண்களின் புருவத்துக்கு கீழே உள்ள பகுதிகளின் இரு முனையிலும் 1 நிமிடத்துக்கு மசாஜ் செய்தால் ஜலதோஷம் சரியாவதுடன் கண்களின் காட்சி கூர்மையும் பிரகாசமாகும்.

மூன்றாம் வழி

மூக்கின் கீழே இரு பக்கங்களிலும், சரியாக பள்ளம் விழும் இடத்தில் அழுத்தினால் தலைவலி, பல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும்.

நான்காம் வழி

பின்பகுதி கழுத்தின் கீழே முதுகு ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண் வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி குணமாகும்.

ஐந்தாவது வழி

காதில் மேல் வாக்கில் முடி ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண்களில் ஏற்ப்படும் சோர்வு சரியாகும்.

ஆறாவது வழி

கைகளின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி மசாஜ் செய்தால் முதுகு வலி, பல் வலி, கழுத்து தசை வலி போன்றவைகள் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments