சிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்

Report Print Meenakshi in ஆரோக்கியம்

நம் உடலில் இதயத்திற்கு அடுத்ததாக இன்றியமையாத உறுப்பு சிறுநீரகமாகும்.

உடலில் தேங்கும் கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, ரத்த அழுத்தத்தினை சமநிலையில் வைக்க உதவுகிறது.

சிறுநீரகத்தினை பாதுகாப்பாக வைக்க நாம் சரியான உணவு முறைகளை பின்பற்றவேண்டும்.

சிறுநீரகத்தினை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவதற்கு நாம் சாப்பிடவேண்டிய பழங்கள்.

ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதாலோ அல்லது ஜீஸாக குடிப்பதாலோ நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலானது குறைந்து, இதய நோய் மற்றும் கேன்சர் போன்ற நோய் வருவது குறைகிறது. இதில் அதிகளவு பைபர் உள்ளதால் சிறுநீரகத்திற்கு பாதுகாப்பினை அளிக்கிறது.

க்ரான்பெர்ரி

க்ரான்பெர்ரியில் உள்ள ஆசிட் ஆனது சிறுநீர் பாதையில் ஏற்படும் கிருமிதொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் அதிகளவு உள்ள மக்னீசியமானது எலும்பினை வலுப்படுத்துகிறது. இதில் விட்டமின் சி மற்றும் பைபர் ஆனது உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கிறது. சிறுநீரக செயல்பாட்டினை சீராக்குகிறது.

ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள பைபர், விட்டமின் சி, விட்டமின் பி, போலோட்டின், மக்னீசியம் போன்றவை சிறுநீரகத்திற்கு அதிக வலிமை அளிக்கிறது. ஆரோக்கியத்தினை அளிக்கிறது. சிறுநீரக கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது.

செர்ரி

செர்ரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சிறுநீரகத்திற்கும் இதயத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கிறது. சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள விட்டமின் சி மற்றும் மக்னீசியம் செல் வளர்ச்சியினை அதிகரித்து விஷத்தன்மை ஏற்படுவதை தடுக்கிறது. புற்றுநோய், வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் அதிக அளவு ப்ளோவானயிடுகள் உள்ளது. இவை நைட்ரிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும் தன்மையுடையவை. இரத்தநாளங்களில் ரத்த ஓட்டத்தினை சரிசெய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடானது அதிகரிக்கிறது.

தர்பூசணிப்பழம்

தர்பூசணிப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. உயர் ரத்தாழுத்தமானது சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும்.

பப்பாளி

பப்பாளி பழத்தில் அமினோஅமிலங்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. இது சிறுநீரகத்தில் ஏற்படும் நோயினை தடுக்கிறது. மேலும் இது உயர் ரத்த அழுத்தத்தினை தடுக்கிறது.

2/5

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments