20 மாதத்தில் 83 கிலோ குறைத்த பெண்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

Anastasia Chiarello என்பவர் தனது 25 வயதில் 165 கிலோ எடை இருந்ததால் பார்ப்பதற்கு அதிக எடைகொண்ட பெண்மணி போன்று காணப்பட்டுள்ளார்.

இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட இவர், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 20 மாதத்தில் 83 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். இது ஒன்றும் சுலபமான விடயம் அல்ல. இதற்காக நான் கடினமாக உடற்பயிற்சி செய்தேன்.

மேலும், உணவு விடயத்தில், Tuna Salad அன்றாடம் சாப்பிட்டு வந்தேன். இது புரோட்டின் அதிகம் உள்ள உணவு மட்டுமல்லாது கொலஸ்ட்ராலும் கிடையாது.

வேர்க்கடலை எண்ணெய், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடுவேன். உணவு மட்டுமல்லாது, உடற்பயிற்சி மையத்திற்கும் தவறாமல் செல்ல வேண்டும்.

இப்படி, மேற்கொண்டதால் தான் 20 மாதத்தில் 83 கிலோ குறைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments