தாங்க முடியாத உடல் சூடா? இதை உடனடியாக செய்திடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

காலநிலைகள் திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் அதிகப்படியான உடல் சூட்டினால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவஸ்தைப்படுவார்கள்.

எனவே கோடைக்காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் இதோ!

உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
  • கோடைக்காலத்தில் சூரியனின் புறஊதாக் கதிர்களால் சரும செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் அது சரும புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே சன்ஸ்க்ரீன் லோசனைத் தவறாமல் சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
  • தினமும் தவறாமல் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் வெயிக் காரணமாக நமது உடலில் உள்ள நீர்ச்சத்து முழுவதும் குறைய ஆரம்பிக்கும்.
  • அன்றாடம் பழங்கள் மற்றும் காய்கறிகளினால் தயார் செய்த சாலட்டுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது உடலின் வெப்பத்தை அதிகரிப்பதோடு, செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
  • கோடை காலத்தில் ஆரோக்கியமான காலை உணவை மட்டும் தவறாமல் சாப்பிட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதுடன், மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • கோடையில் மது குடிப்பதை தவிர்த்து, அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். இதனால் உடலில் அதிகப்படியான நீர்வறட்சி அடையவதைத் தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments