3 நிமிடத்தில் 800 கலோரிகளை எரிக்க வேண்டுமா? இதோ சூப்பர் ஐடியா

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

ஒரு நாளைக்கு சராசரியாக 1600 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது.

சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை தான் நம் உடலுக்குள் செல்லும் போது சக்தியாக மாற்றப்படுகிறது. இந்த சக்தி தான் கலோரியாக கணக்கிடப்படுகிறது.

உடல் செயல்பாடுகளுக்கு மிஞ்சி சக்தி உள்ளே சென்றால், அதாவது அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டால் அது உடலிலேயே கொழுப்பாக படிந்து விடுகிறது.

மனிதன் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. அவ்வாறு கலோரிகள் எரிக்கப்படாவிட்டால் அது உங்கள் உடலில் கொழுப்பாக படிந்து உடல் எடையை அதிகரிக்க வழி வகுக்கிறது.

கலோரிகளை எரிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் அவுஸ்திரேலியாவில் பிரபலமாக பின்பற்றப்பட்டு வரும் Cryotherapy நுட்பம்.

இந்த, Cryotherapy மூலம் 3 நிமிடத்தில் 800 கலோரியை எரித்துவிடலாம். இந்த நுட்பம் அதிகமாக அறுவை சிசிக்சை மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் தான் இந்த நுட்பத்தை மேற்கொள்வார்கள்.

அதாவது, Cryotherapy Chamber - க்குள் நீங்கள் 3 நிமிடம் அடைத்து வைக்கப்படுவீர்கள். இதனுன் ஹைட்ரஜன் நீராவி நிரப்பப்பட்டு - 140 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. சுமார் 3 நிமிடங்கள் ஆனவுடன் தானாகவே இந்த Chamber தன்னை நிறுத்திக்கொள்கிறது.

இவ்வாறு, 3 நிமிடங்கள் நீங்கள் இந்த Cryotherapy Chamber - க்குள் நிற்பதால் 800 கலோரி எரிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் உங்கள் உடலில் உள்ள வலிகள் மற்றும் சதைப்பிடிப்பினையும் இது நிவாரணம் செய்கிறது என இதனை தயாரித்த Peter Watson கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments