ஒரு மாதம் இதை செய்யுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்

ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும் போது சுயகட்டுப்பாடு அவசியம், சில நேரங்களில் டயட்டை மீறி நம்மை அறியாமல் சாப்பிடும் போது இதற்கு முன்னர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகிவிடும்.

அப்படி இல்லாமல் சுயகட்டுப்பாடுடன் ஒருமாதம் மட்டும் இதை செய்து பாருங்களேன்,

  • ஒரு மாதம் மட்டும் சந்தைகளில் விற்கப்படுகின்ற விதவிதமான நிறத்தில் இருக்கும் இனிப்பு மிட்டாய்கள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும்.
  • தினமும் சத்துக்கள் அதிகமாக நிறைந்த பழங்களை சாலட் செய்தும், காய்கறிகளை சூப் செய்தும் தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • ஒவ்வொரு வாரத்திற்கும் தேவையான நட்ஸ் மற்றும் பேரிச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு அதை அந்த வாரத்தின் முடிவில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
  • நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே தினமும் குறைந்தது 10 டம்ளர் நீரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
  • நாம் வாரத்தில் 3 நாட்கள் கீரையை சமைத்து கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் இந்த கீரையை சமைக்கும் போது, மூடி வைத்து சமைக்காமல் அதிக நேரம் வேகாமல், சத்துக்கள் அழியாத வண்ணம் இருக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments