உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முத்தம்! எப்படி தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்

முத்தம் என்பது ஒரு அன்பான வெளிப்பாடு மட்டும் அல்ல, அது சில உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகவும் கூட உள்ளது.

முத்தம் கொடுத்தால் உறவு நீடிக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதனால் நமது உடலின் ஆரோக்கியமும் நீடிக்கிறது என்பதை இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள்.

எனவே சீரான உடல் நலத்தை பெறுவதற்கு, முத்தம் எந்த வகையில் தீர்வளிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

முத்த சிகிச்சையால் கிடைக்கும் நன்மைகள்
  • நமது அன்புக்குரியவரிடம் அதிக நேரம் முத்தம் சிகிச்சையை பரிமாறிக்கொள்ளும் போது, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
  • நமது உடலில் தேவையின்றி தேங்கும் கலோரிகள் காரணமாக கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகரிக்கிறது. எனவே இந்த பிரச்சனையை தடுக்க முத்தமிட்டுக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எளிதில் கரைய உதவிபுரிகிறது.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஏற்படும் தீராத தலைவலி பிரச்சனையை போக்குவதற்கு, தங்களின் துணையுடன் முத்தமிட்டுக் கொள்வது சரியான தீர்வளிக்கும்.
  • தங்களின் துணையுடன் அன்பாக முத்தமிட்டு கொள்வதன் மூலம் ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் விறைப்புப் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

  • தங்களின் துணை துவண்டு போயிருக்கும் போது, முத்தம் கொடுத்தால், அது அவர்களின் புத்துணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை பெற உதவி புரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

  • அன்றாடம் தினமும் முத்திமிட்டுக் கொள்ளும் சிகிச்சையை செய்வதால், நமது முகத்தின் தசைகளை வலுவடைய செய்து, முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.

  • நமது மனதில் உள்ள அழுத்தம் குறைந்து நல்ல நிலையை அடைவதற்கும், தசைப்பிடிப்புகள் ஏற்படும் போது, அதன் வலி குறைவதற்கும் இதமான முத்த சிகிச்சை நல்ல பயன் தருகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments