எலும்புகளை பலமாக்கும் உணவுகள்

Report Print Aravinth in ஆரோக்கியம்
1212Shares

எழும்புகள் மிகுந்த வலுவுடன் இருக்க வேண்டியவை, இவை பாதிக்கப்படும் தருவாயில் மனித உடலே செயலிழந்தது போன்று ஆகிவிடும்.

இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதையும் தவிர்க்கவும், உடலில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் டி-யும் அதிகளவு இருத்தல் வேண்டும்.

ஒருவருக்கு இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருக்குமாயின் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியே தான்.

இதன்படி, பார்த்தால் சில உணவுகளில் மட்டுமே இந்த சத்துகள் அதிகளவு காணப்படுகின்றன.

முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி மற்றும் தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து மிகவும் அதிகமாக இருக்கின்றன.

இவற்றை தினமும் உணவில் சாப்பிட்டு வர எலும்பு சம்பந்த நோய்கள் வருவதை வெகு அளவில் குறைக்கலாம்.

மேலும், பால், தயிர், மீன், முட்டை, வெண்ணைய் ஆகியவற்றிலும் இந்த சத்துகள் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுவுடன் காணப்படும்.

தேவைப்படும் தருவாயில் வைட்டமின் டி மாத்திரையை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டவே அண்டாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments