அம்மாடியோவ்! உடலின் இந்த பகுதியில் இவ்வளவு விடயம் இருக்கா?

Report Print Raju Raju in ஆரோக்கியம்

மனிதர்களின் உடலில் வயிறு முக்கிய பகுதியாக விளங்குகிறது. உணவுகள் சாப்பிட்டால், தண்ணீர் குடித்தால் வயிற்றின் உள்ளே போகும். அது தான் நம்மில் பலருக்கு வயிற்றை பற்றி தெரிந்த விடயம்!

அதை பற்றி சில தெரியாத விடயங்கள் இதோ

  • நாம் எந்தவொரு உணவையோ அல்லது தண்ணீரையோ அருந்தும் போது, சிறிதளவிலான காற்றும் உணவுடன் நம் வயிற்றுக்குள் செல்கிறது. பின்னர் இந்த காற்றானது ஏப்பம் விடுதல் மூலம் வயிற்றிலிருந்து வெளியேறுகிறது
  • கோபத்திலோ, வெட்கத்திலோ அல்லது வேறு காரணத்திலோ நம் முகம் சிவந்தால் வயிற்றில் புறணி பகுதி கூட சிவப்பாக மாறும் தெரியுமா?
  • ஒரு மனிதனின் வயிற்றில் ஒரே சமயத்தில் 1.5 லிட்டர் அளவு திரவ உணவுகள் தேங்க முடியும்.
  • மன அழுத்தம் அதிகம் இருந்தால் உடலில் இரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகளை அது ஏற்படுத்தும்.
  • வயிற்றின் அளவுக்கும் உடல் எடைக்கும் சம்மந்தமே கிடையாது. எடுத்துகாட்டுக்கு சிலர் ஒல்லியாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் வயிறு பெரிதாக இருக்கும்.
  • வயிற்றின் உள்பகுதியானது hydrochloric ஆசிட்டால் நிறைந்ததாகும். இது வயிற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
  • வயிற்று புண் என்பதை பலரும் கேள்விபட்டிருப்போம். இது வயிற்றின் உள்பகுதியில் தேங்கும் கெட்ட அமிலத்தால் தான் உண்டாகிறது.
  • உணவே மருந்து என்பது பழமொழி! நான் சாப்பிடும் உணவுகளை பொருத்தே வயிற்றின் செயல்பாடுகள் அமைகிறது. சரியான நேரத்தில், சத்தான உணவுகளை மருத்துவர்கள் ஆலோசனைபடி சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான எந்த பிரச்சனையும் வராது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments