காலில் தங்கம்? வெளியான ரகசியம் இதோ

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

தங்கத்தின் மீது ஆசையில்லாத பெண்களை இந்த உலகத்தில் தேடித்தான் பிடிக்க வேண்டும்.

பட்டு சேலைகள், வெள்ளி நகைகள், பித்தளை, தங்கம் போன்றவற்றினை பெண்கள் முன்லையில் குவித்தால் அவர்களின் முதல் தெரிவு தங்கமாகத்தான் இருக்கும்.

அந்த காலத்தில் நகைகள் அணிந்ததற்கு, உடல் உஷ்ணம் குறைவு, மூக்கில் தங்கம் அணிந்தால் கண்பார்வைக்கு நல்லது போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இன்றைய காலத்தில் தங்கம் அணிவது என்பது அழகு மற்றும் ஆடம்பரத்திற்காக மட்டுமே என்ற நிலை வந்துவிட்டது.

பணத்திற்கு மனிதன் எவ்வளவு மரியாதை கொடுக்கிறானோ, அதே மரியாதையைத்தான் மனிதன் தங்கத்திற்கும் கொடுக்கிறான்.

அப்படியிருக்கையில் அந்த தங்கத்தினை வைத்து பல்வேறு அணிகலன்கள் செய்து கழுத்து மற்றும் கைகளில் மாட்டிக்கொண்டால் பரவாயில்லை.

ஆனால், அதனை காலில் அணிந்துகொள்கிறார்கள். அது சரி பணம் இருக்கிறவன் காலில் போட்டு மிதிக்கத்தான் செய்வான். ஆனால் அறிவியல் ரீதியாக காலில் தங்கம் அணிந்தால் வாத நோய்கள் வரும் என கூறப்படுகிறது.

தங்கம் லஷ்மிதேவியின் அம்சம். தங்கத்தால் செய்த கொலுசு, மெட்டி போன்றவற்றை காலில் போடுவது என சாஸ்திரம் கூறுகிறது.

லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை. மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.

காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்பு வலுவாக இருக்கும். மோதிர விரலில் தங்கம் இருந்தால் கருப்பையும், விந்துவும் வலுவடையும்.

ஆனால், காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிது என மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள்.

இதுவே, காலில் தங்கம் அணியாததன் ரகசியம் ஆகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments