இரும்பு மீனில் சமைக்கப்படும் உணவு! அட சூப்பரான மருந்தாம்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உலகளவில் உள்ள மக்கள் தொகையில் 3.5 பில்லியன் பேர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. இந்த குறைபாட்டால் தான் பலருக்கும் இரத்த சோகை நோய் ஏற்படுகின்றது.

இதற்காக காம்போடியா நாட்டில் மருத்துவ ஆய்வாளர்கள் ஒரு அருமையான உணவை மருந்தாக கண்டுபிடித்துள்ளனர்.

கம்போடியா நாட்டில் உள்ள பாதி ஜனதொகை இரும்புச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக மருத்துவர் கிரிஸ்டோபர் சார்லஸ் தலைமையிலான மருத்துவ குழு கண்டுபிடித்திருப்பது தான் இரும்பு மீன்கள் (iron fish).

ஒரு இரும்பு மீனானது 200 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதை சாப்பிட ஆரம்பித்த பின் காம்போடியா நாட்டு மக்கள் உடல் நலத்தில் மிக பெரிய மாற்றம் நடந்துள்ளது.

இந்த இரும்பு மீன்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

சில வருடங்களுக்கு காம்போடியா நாட்டில் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இரும்பு சத்து குறைப்பாட்டுடன் உயிரிழப்பு அபாயத்திலேயே பிறந்தனர்.

பின்னர் இந்த இரும்பு மீன்கள் நடைமுறைக்கு வர அதை பிரசவிக்கும் தாய்மார்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் குழந்தைகள் அங்கு ஆரோக்கியமாக பிறக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த இரும்பு மீன்களை சமைப்பது சுலபமாகும். பாத்திரத்தில் அதை போட்டு அடுப்பில் வைத்து, சில சொட்டுக்க்கள் எலுமிச்சை சாறை அதில் ஊற்ற வேண்டும்.

பின்னர் பத்து நிமிடம் அது வேகவைத்தால் அது சாப்பிட தயாராகி விடுகிறது. பலவகை உணவுகளை போல இதில் சுவை இருப்பதில்லை. ஆனால் உடலுக்கு இரும்பு சத்து பலத்தை இது நன்றாக சேர்க்கிறது.

இதை காம்போடியா மக்களில் பெரும்பாலானோர் தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் விலையும் குறைவு, சமைப்பதும் எளிது என்பதால் இதை நாங்கள் விரும்பி சாப்பிடுவதாக கூறுகிறார்கள் அந்நாட்டு மக்கள்.

அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதை எங்கள் மக்கள் சாப்பிட ஆரம்பித்த 9 மாதங்களிலேயே 50 சதவீத அளவுக்கு இரத்த சோகை பிரச்சனை மக்களுக்கு தீர்ந்துள்ளது.

எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் இரும்புச்சத்து குறைப்பாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டியதே எங்கள் விருப்பமாகும் என கூறியுள்ளனர்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments