பொதுவாக மஞ்சள், இஞ்சி ஆகிய இரண்டு உணவுப் பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
எனவே இந்த இரண்டு உணவையும் தினமும் நமது உணவில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொண்டால் போதும். இதனால் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் மற்றும் இஞ்சியை ஒன்றாக சேர்த்து டீ போல செய்து தினமும் குடித்து வரலாம்.
எனவே இந்த மூலிகை வகை டீயை எப்படி தயாரிப்பது என்றும், அதனுடைய பயன்கள் பற்றியும் நாம் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- இஞ்சி - ஓர் சிறிய துண்டு
- சுடுதண்ணீர் - ஒரு கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், இஞ்சி மற்றும் மஞ்சளை நீருடன் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மூலிகை டீயின் நன்மைகள்
- நமது உடம்பில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அழித்து விடுகிறது.
- அதிக அளவு இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.
- நமது உடலில் கட்டிகள் உருவாகுவதை தடுத்து, காயங்களை குணப்படுத்துகிறது.
- கணையத்தின் செயற்திறனை அதிகரித்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
- கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலின் ஆரோக்கியத்தை வலிமை அடையச் செய்கிறது.
- நமது உடம்பில் நோய் தொற்றுகளின் தாக்கத்தை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
குறிப்பு
சுடுநீரில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த இந்த மூலிகை டீயை ஒருநாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிக்க வேண்டும்.