உயிர் போகும் அளவு கடுமையான வலிக்கு தீர்வு சில நிமிடங்களில்!

Report Print Sujitha Sri in ஆரோக்கியம்

நாம் இந்த நவீன உலகத்தில் பல்வேறு நோய்களுக்கு நாள்தோறும் ஆட்பட்டு வருகிறோம். அதற்கு தீர்வு கொடுக்கும் என நம்பி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் உயிரை பறிக்கும் அரக்கனாக சில வேளைகளில் மாறி விடுகின்றது.

எளிய முறையில் இயற்கையாக தீர்க்கக்கூடிய நோய்களை பணம் செலவழித்து மருந்து எடுத்து நோயை இன்னும் பெரியதாக்கிக் கொள்கிறோம் அல்லது வேறு நோய்களை தேடிக்கொள்கிறோம்.

அந்த வகையில் ஒன்று தான் பல்வலி.

பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர்.

ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

தாங்க முடியாத அளவு வேதனையை தரும் இந்த பல்வலிக்கு பல மருந்து மாத்திரைகள் காணப்பட்டாலும் கூட அதனை வீட்டிலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.

இயற்கையான முறையில் சில நிமிங்களிலேயே தீர்வு கிடைத்து விடும்.

முதலில் வலியை உணரும் பல்லில் சக்கரையை வைத்து விட்டு, சிறிதளவு மிளகு(18) எடுத்து தூளாக்கி, அதனை கால் டம்ளர் நீரில் விட்டு சுடவைக்க வேண்டும்.

சுடவைத்த நீரினை விரல் சூடு தாங்கும் அளவிற்கு ஆறவிட்டு அதனை வலிக்கும் பல் இருக்கும் பகுதியில் வெளியே கன்னத்தில் அந்த நீரால் தோய்க்க வேண்டும்.

பல் வலி உள்ள போது இதனை செய்து வந்தால் பல்வலி சில நிமிடங்களில் மறைந்து விடும்.

பக்கவிளைவு இன்றி சிறந்த முறையில் உடனடியாக இயற்கையான வழியில் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதே போன்று இன்னும் பல எளிய இயற்கை முறைகள் உள்ளன.

  • வீக்கத்துடன் பல்வலி ஏற்பட்டால் ஐஸ் கட்டியை பருத்தி துணியில் சுற்றி வலி உள்ள இடத்தில் வைத்தால் வீக்கம் குறைவதோடு பல் வலியும் குறையும்.

  • தினமும் காலையில் நித்திரையிலிருந்து எழுந்தவுடன் நல்லெண்ணையை வாயிலெடுத்து கொப்பளித்து துப்பிவிடவேண்டும். அவ்வாறு செய்து வருவதன் மூலம் வாயில் ஏற்படும் பிரச்சினைகள் வராது தவிர்த்துக்கொள்ள முடியும்.
  • இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாயிலிட்டு கொப்பளித்துவர பல்வலி குறையும்.
  • வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பின் நீக்கிவிட வேண்டும்.
  • இரண்டு கராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால் பல் வலி குறைந்துவிடும்.

6. பச்சையாக வெங்காயத்தை மென்று சாற்றை விழுங்க பல்வலி குறையும். அத்தோடு அவ்வாறு வெங்காயத்தினை மென்று சாற்றினை விழுங்குவதன் மூலம் வெங்காயத்தின் காரத்தன்மை பல்லிலுள்ள கிருமிகளை அழிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments