ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அதிசயங்கள்!

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
764Shares

காலையில் எழுந்ததும் ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, ஒட்டுமொத்த உடலுறுப்புக்களின் செயல்பாடும் மேம்படும்.

இயற்கை மருத்துவத்தில் இருந்து கிடைக்கும் தீர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். முக்கியமாக இயற்கை மருத்துவம் உடலில் உள்ள ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் சரிசெய்யாது, வேறு பிரச்சனைகள் இருந்தால், அதையும் சரிசெய்துவிடும். மேலும் இயற்கை மருத்துவத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது மற்றும் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடியது.

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை:

ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, தினமும் காலையில் சாப்பிட வேண்டும்.

பலன் #1: இந்த கலவை குடலியக்கத்தை சீராக்கி, மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் வழங்கும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது டாக்ஸின்களை வெளியேற்றி, உணவுகளை முறையாக செரிமானமடையச் செய்யும்.

பலன் #2: ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இரத்த ஓட்டத்தை சீராக வைத்தக் கொள்ளும். மற்றும், இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை நீக்கும்.

பலன் #3: உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும் போது, உடல் சோர்வுடனும், பாரமாகவும், உப்புசத்துடனும் இருக்கும். ஆனால் இக்கலவையை தினமும் உட்கொள்ளும் போது, அது கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, அவற்றில் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும்.

பலன் #4: மூட்டு அல்லது கீல்வாத வலிகளைக் கொண்டவர்கள், இக்கலவையை தினமும் உட்கொள்வதால், நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இக்கலவையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. ஆகவே உங்கள் ஒட்டுமொத்த உடலுறுப்புக்களின் செயல்பாட்டை மேம்படுத்த நினைத்தால், இக்கலவையை தினமும் சாப்பிடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments