வியர்வை துர்நாற்றமா? அதை தடுக்க ஒரு பழம் போதுமே!

Report Print Printha in ஆரோக்கியம்
817Shares

பொதுவாக நம் உடலில் இருந்து வெளிவரும் வியர்வையானது, நமது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.

நமது உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வையில் டெர்மிசிடின் இருப்பதால், இவை நமது உடம்பின் சருமத்துளைகளில் பாக்டீரியாக்கள் நுழைவதைத் தடுப்பதோடு, அந்த பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.

வியர்வையின் துர்நாற்றத்தை தடுக்க, செயற்கை முறைகளான டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள கெமிக்கல் மற்றும் டாக்ஸின்கள் நமக்கு புற்றுநோய், இனப்பெருக்க மண்டல பாதிப்புகள் மற்றும் அல்சைமர் போன்ற ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

அன்றாடம் நமது உடம்பில் அதிகமாக வியர்வை வெளியேறுவதால், அது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த துர்நாற்றப் பிரச்சனையை தடுக்க எலுமிச்சை பழம் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வியர்வை துர்நாற்றத்தை போக்க எலுமிச்சைப் பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

நாம் தினமும் குளித்து முடித்து விட்டு வந்ததும், எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதை இரண்டு அக்குள்களில் தேய்த்து, நன்றாக காய்ந்த பின் உடையை அணிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த எலுமிச்சை பழத்தில், சிட்ரிக் அமிலம் இருப்பதால், இவை நமது அக்குள்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழித்து, ஒரு நாள் மட்டுமின்றி பல நாட்கள் வரை வியர்வை துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்கச் செய்கிறது.

துர்நாற்ற வியர்வை வராமல் என்ன செய்ய வேண்டும்?
  • மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகினால், வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
  • நமது உடல் அதிகமாக வியர்த்து விட்டால், குளிக்கும் போது, நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளித்தால், வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் போய்விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments