69 கிலோ குறைந்ததன் ரகசியம்: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

உடல் பருமன் பிரச்சனை என்பது மனிதனின் உயிரை பறிக்க கூடிய ஒன்றாகும்.

பொதுவாக உடலில் நமக்கு தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும், உடல் எடை குறையும்.

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், உடல் உழைப்பு இல்லாமை போன்றவையே ஆகும்.

உடம்பில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு சிலர் செயற்கையான முறைகளை பின்பற்றி உடலுக்கு ஆபத்துகளை தேடிக்கொள்கின்றனர்.

கொழுப்பினை உறிஞ்சி எடுக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சைளை மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

ஆனால், இயற்கையான முறையிலேயே உடல் எடையை குறைத்து நமது அழகினை பராமரித்துக்கொள்ளலாம் என உலகுக்கு நிரூபித்துள்ளார் Leah என்ற பெண்.

35 வயதான Leah வுக்கு எண்ணெய்யில் பொரித்து எடுத்த உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரவு நேரத்தில் இவர் அதிகமாக எடுத்துக்கொள்வது பொரிக்கப்பட்ட உணவுகள், சிக்கன் உணவுகள் அல்லது துரித உணவுகள் ஆகும்.

.இந்த நேரத்தில் தான் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் நடக்கும்போது. திருமணம் நடக்கும்போது ஓரளவு உடல் பருமனாக இருந்த இவர், திருமணம் முடிந்த பின்னர் உடல் எடை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளார்.

இவருக்கு சமையல் செய்யத்தெரியாது என்பதால், அதிகமான உணவுகளை கடையில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்படி வீட்டில் உணவினை தயார் செய்தாலும் ரெடிமேட் உணவுகள் தான் தயார் செய்துவிடுவார்.

இந்நிலையில், தனது உடல் எடையால் எவ்வித ஆடைகளையும் அணிய முடியாமலும், மூச்சு எடுப்பதிலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதனால் உடல் எடை குறைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, பொரித்த உணவுகள், சோஸ் வகைகள் மற்றும் சிப்ஸ் ஆகிய உணவுகளை தவிர்த்துள்ளார்.

ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். இவர் டயட்டின்போது அதிகம் எடுத்துக்கொண்டது காய்கறிகள்தான்.

மேலும், கடைகளில் தயார் செய்யப்படும் உணவுகளையும் தவிர்த்துள்ளார். 2010 ஆம் ஆண்டு தனது டயட்டினை தொடங்கியுள்ளார் . 3 வருட முயற்சிக்கு பிறகு தனது உடல் எடையில் 69 கிலோ குறைத்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது, எனது உடல் நான் முன்பு இருந்தது போன்று இயல்புநிலைக்கு திரும்பியதால் சந்தோஷமாக இருக்கிறது. இனி உடல் எடை அதிகரிக்காதவாறு கவனமாக இருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments