ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இலை

Report Print Printha in ஆரோக்கியம்

திருவிழா மற்றும் பண்டிகை நாட்களின் போது, நமது வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் மாவிலைகள், நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான நன்மைகளைத் தருகிறது.

மாவிலையில் காஃபிக் அமிலம், மங்கிஃபெரின், காலிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள் போன்ற அமிலச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

எனவே 15 மாவிலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அந்த நீரை இரவு முழுவதும் குளிர வைத்து, காலையில் தினமும் சாப்பிடுவதற்கும் முன் டீயைப் போல தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வர வேண்டும்.

மாவிலையின் மருத்துவ குணங்கள்
  • மாவிலையானது, நமது உடம்பில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • மாவிலையில் பெக்டின், விட்டமின் C மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால், இந்த மாவிலை நமது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதயத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
  • மாவிலையில் விட்டமின் A சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த மாவிலை நமது கண் பார்வை குறைபாட்டினால் ஏற்படும் ரெட்டினாபதி போன்ற நோய்கள் வராமல் தடுத்து, கண் பார்வையை ஆரோக்கியமாக வைக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments