18 மாதத்தில் 64 கிலோ குறைத்தது எப்படி?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

துரித உணவுகள் மற்றும் வேலைப்பளு காரணமாக உடல் எடை அதிகரித்த பல்லவி, 18 மாதத்தில் 64 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

சண்டிகாரை சேர்ந்த பல்லவி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது பணி நிமித்தம் காரணமாக மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

தனது பணியின் காரணமாக இவரது வாழ்க்கை முறை மாற்றமடைந்துள்ளது. பணிக்கு செல்ல வேண்டுமென்பதால் துரித உணவுகளை சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு சாப்பிடமுடியாத காரணத்தினால் உடல் எடை அதிகரித்துள்ளார்.

மேலும், இவர் வேலை பார்த்த கம்பெனியில் உடல்தோற்றம் முக்கியம் என்பதால், இவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் மீண்டும் வீடு திரும்பிய இவர், தனது உடல் எடையை சோதனை செய்தததில், 132 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார்.

மேலும், தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர் அறுவை சிகிச்சை மூலம் அதிலிருந்து குணம் பெற்றார். பின்னர் தனது உடல் எடயை குறைக்க வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தனது டயட் குறித்து அவர் கூறியதாவது,

அறுசை சிகிச்சை நடந்த ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 200 மீற்றர் தூரம் வரை நடப்பேன்.

2 மாதங்களுக்கு பின்னர் நீச்சல் மற்றும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். சுமார் 18 மாதங்கள் இவை இரண்டுக்கும் சென்றேன்.

ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொண்டேன், ப்ரஷ் பழங்கள் மற்றும் காய்கறிகளையே சாப்பிடுவேன். முட்டை, மீன் மற்றும் Brown Rice ஆகியவற்றையே அதிகமாக சாப்பிடுவேன்.

துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். டயட்டில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று தண்ணீர். ஒருநாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

132 கிலோ எடையில் இருந்த இவர், 18 மாதத்தில் 64 கிலோ குறைத்துள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments