பெண் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
பெண் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
408Shares

புற்றுநோயால் அவதிப்படும் 46 வீதமான பெண்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பிந்திய திருமணம், பலருடன் உடலுறவு மற்றும் தாமதித்த கருத்தரிப்பு போன்றனவே பெண்களுக்கு புற்று நோய் தோன்ற காரணமாகின்றது.

இவற்றில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்கள் பொதுவான புற்றுநோய்களாகும்.

2 வீதமான புற்றுநோயால் அவதிப்படும் இந்தியப் பெண்கள் 20 - 30 வயதுக்குட்பட்டோர்.

16 வீதமானோர் 30 - 40 வயதுக்குட்பட்டோர். 28 வீதமானோர் 40 - 50 வயதுக்குட்பட்டோர்.

இதன்படி கிட்டத்தட்ட 46 வீதமானோர் 50 வயதுக்குட்பட்டோர்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பானது எச்சரிக்கப்பட வேண்டியதென பிரபல மூத்த கேன்சர் சிகிச்சை நிபுணர் Sameer Kaul சொல்கிறார்.

அவர் மேலும், பெண்கள் மேற்படி நோய் நிலைமை தாங்கமுடியாத நிலைக்கு வரும் வரை, குணப்படுத்த முடியாது போகும் வரை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள் என்கிறார்.

NICPR (National Institute of Cancer Prevention and Research) இன் தகவலின் படி இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறப்பதாக சொல்லப்படுகிறது.

அடையாளம் காணப்படும் இரு மார்பகப் புற்றுநோயாளிகளில் ஒருவர் இறப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரம் ஒவ்வொருநாளும் கிட்டத்தட்ட 2 500 பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோயால் இறப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments