இசையை வெறுப்பவர் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. அந்தவகையில், இசை மனதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் தக்க வைக்கிறது.
மனதை தீண்டும் மெல்லிய பாடல்கள் மயிலிறகால் வருடுவது போல அட்டகாசமான தாளங்களுடன் கூடிய பாடல்கள் நம் ஆர்ப்பரிக்கும் மனதை ஆள்கிறது.
மேலும், சோகபாடல், எழுச்சியை தூண்டும் பாடல், மெல்லிய இசை கொண்ட பாடல் என பாடல்களால் நாம் எத்தகைய மனதையும் மாற்றும் வலிமை கொண்டுள்ளது.
அந்த வகையில் இசை எம் மனதை மட்டுமல்ல எமது ஆரோக்கியத்திலும் ஆளுமை செலுத்துகிறது என்றால் நீங்கள் நம்புகின்றீர்களா?
ஆம் இவ்வாறான இசை எமது உடலை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என ஒரு ஆய்வை முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், இன்றைய காலகட்டத்தில் பலரும் அவதியுறும் ஒரு நோய் தான் இரத்தக் கொதிப்பு. கட்டுக்கடங்காமல் இருக்கும் இரத்த நாளங்களையே சாந்தப்படுத்தி, கட்டுக்குள் வைக்கும் சக்தி பழமையான பாரம்பரிய இசைக்கு உண்டு.
அதுவும் பழமையான, இசை மேதைகளான மொசார்ட் மற்றும் ஜோஹன் ஸ்ட்ராஸ் ஆகியோரின் இசை, இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது என்று ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளனர்.
இந்த இரு மேதைகளுமே ஆஸ்திரியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். இந்த ஆய்வை இரு குழுவினரைக் கொண்டு பரிசோதித்தனர். ஒரு குழுவில், சுமார் 60 உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை 25 நிமிடம் மொசார்ட் அல்லது ஜோஹன் ஸ்ட்ராஸ் இசையை கேட்க வைத்தனர்.
மற்றொரு குழுவினை எதுவும் செய்யாமல் அமைதியாக அமரவைத்தனர்.
இந்த ஆய்வில், இந்த இரு இசையை கேட்ட உயர் ரத்த நோயாளிகள் அதிக ரத்த அழுத்தம் மற்றும் வேகமான இதயதுடிப்பும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததை பரிசோதித்து, தெளிவுபடுத்தினர்.
பாரம்பரிய இசைக்கும், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு உண்டு. அவை மனித மனங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜேர்மனியில் உள்ள ரஹ்ர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹான்ஸ்-ஜோசிம் என்பவர் கூறியிருக்கிறார்.
அதிலும் மொசார்ட்டின் இசை மிக அற்புதமான பலனை தருகிறது என்று வியந்து சொல்கிறார். மேலும் கூடுதலான தகவல் என்னவென்றால் மொசார்ட்டின் இசையை கேட்பதனால் கார்டிசால் ஹார்மோன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக சுரக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.
கார்டிசால் மன அழுத்தத்தை சமன் செய்யும் ஸ்டீராய்டு ஹார்மோனாகும்.
எனவே பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இது அதிகமாய் மன அமைதியை தருகிறது.