ஆய்வாளர்கள் 4 வகையான வெவ்வேறு இன்சுலின் உற்பத்தி செய்யும் பீற்றா-கலங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இவை நீரிழிவு நோய்க்கெதிரான சிகிச்சைக்கு வருங்காலத்தில் முக்கியமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.நீரிழிவானது உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானோரை பாதிக்கிறது.
இது பொதுவாக இன்சுலின் உற்பத்தி செய்யும் கலங்களின் செயற்பிறழ்வாலும், அவை இழக்கப்படுவதாலும் ஏற்படும் நோய் நிலைமையாகும்.
மேற்படி கலங்களே உடல் வெல்லத்தின் அளவை சரியான அளவில் பேண உதவுகின்றது.இதுவரையிலும் பீற்றாக் கலங்கள் தனிப்பட்ட, ஒத்த தன்மையுடைய கலங்களாகவே கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது துணை கல வகைகளுக்கிடையில் நூற்றுக் கணக்கான பரம்பரையலகுகள் விதம் விதமாக வெயிப்படுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான இன்சுலின் பிறப்பிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் சில கலங்கள் இன்சுலினை பிறப்பிப்பதில் மற்றைய துகளிலும் வினைத்திறனாக உள்ளதென சொல்லப்படுகிறது.அதேபோல் மற்றைய கலங்கள் விரவாக மீளுருவாக்கப்படுகின்றன.
இதனால் இவ் வகையான துணைக் கலங்கள் நீரிழிவு நோய்க்கெதிராக நல்ல பயனை தரக்கூடும் என ஆய்வாளர் Grompe சொல்கிறார்.
இங்கு சதையியில் உள்ள கிட்டத்தட்ட 4000 க்கும் அதிகமான பீற்றாக்கலங்களும் அவற்றின் துணை வகைகளின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டிருந்தன.
இச் சதையி பீற்றாக் கலங்கள் குளுக்கோசுக்கு பரிவுள்ள, இன்சுலின் உற்பத்திசெய்யும் கலங்களாகும்.
இது பற்றிய மேலதிக ஆய்வுகள் மூலம் நீரிழிவு நோய்க்கெதிராக பலவகையான புது சிகிச்சைகளை அறிமுகப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.