பிரித்தானியாவின் தெற்கு பகுதியில் திடீரென ஒரு வெடிச்சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டார்கள் இலட்சக்கணக்கான பிரித்தனியர்கள்.
நேற்று மதியம், பிரித்தானியாவின் Hertfordshire, எசெக்ஸ், கென்ட், கேம்பிரிட்ஜ், வடக்கு மற்றும் தெற்கு லண்டனில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் வெடிச்சத்தம் போன்ற ஒன்றைக்கேட்டு திடுக்கிட்டார்கள்.
கதவு ஜன்னல்கள் குலுங்க, அதிர்ச்சியடைந்த ஏராளமான மக்கள் உடனே பொலிசாரை அழைத்தார்கள்.
நடந்தது என்ன என்பது குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளது பிரித்தானிய விமானப்படை.
ஜேர்மன் பயணிகள் விமானம் ஒன்று பிரித்தானிய வான் பரப்பிற்கு நுழைந்தபின் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்துள்ளது. தகவலறிந்த பிரித்தானிய விமானப்படையின் ஜெட் ஒன்று உடனடியாக அந்த ஜேர்மன் விமானத்தை வழிமறிக்க புறப்பட்டுள்ளது.
அந்த போர்விமானம் மின்னல் வேகத்தில் புறப்பட்ட சத்தம்தான் மக்களுக்கு வெடிச்சத்தம் போல் கேட்டுள்ளது.
ஜேர்மன் விமானத்தை வழிமறித்து பாதுகாப்பாக Stansted விமான நிலையத்தில் கொண்டு இறக்கிவிட்டு சென்றுள்ளது விமானப்படையின் ஜெட் விமானம்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த ஜேர்மன் விமானம், படுக்கை வசதியுடன் 12 பேர் பயணிக்கும் வி.ஐ.பிக்களுக்கான சொகுசு விமானம் ஆகும்.