எந்த ஜேர்மனி முதன்முதலில் கொரோனா கண்டறியும் சோதனையை உருவாக்கியதோ, எந்த ஜேர்மனி முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதோ, அதே ஜேர்மனியில் விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தும் கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்று பயன்பாட்டில் உள்ளதாம்.
எப்படி பல நாடுகளில் அலோபதி தவிர்த்த மாற்று சிகிச்சைகளான இயற்கை வைத்தியம் முதலானவையும் பயன்பாட்டில் உள்ளனவோ, அதேபோல் ஜேர்மனியிலும் ஒரு சிகிச்சை பயன்பாட்டில் உள்ளது.
1861ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த Rudolf Steiner என்பவரது கொள்கைகளைப் பயன்படுத்தும் Steiner மருத்துவமனைகள் இன்னமும் ஜேர்மனியில் உள்ளன.
அவை, கொரோனா தொற்றியவர்களுக்கு இஞ்சி தாவரத்தின் வேரை பொடி செய்து, அதை பயன்படுத்தி நெஞ்சில் பற்று போடுதல், கடுகுப்பொடி அல்லது yarrow என்ற செடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேயிலை மற்றும் வீரியம் அதிகரிக்கப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட இரும்பு ஆகியவற்றை ஹோமியோபதி முறையில் மாத்திரைகளாக்கி கொடுத்தல் ஆகிய முறைகளைப் பின்பற்றுகின்றன.

இந்த மருத்துவம் பலனளிக்கிறதா என்பதை உறுதி செய்யும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்பதுடன், ஆய்வு செய்வதற்கான நேரமும் இல்லை என்னும் நிலைமை இருக்க, அவை நிச்சயம் நோயாளிகளுக்கு நன்மை செய்வது தெரியவந்துள்ளது.
இந்த சிகிச்சை முறைக்கு ஜேர்மனியில் ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆதரவு உள்ளதை மறுக்க இயலாது.
1830களில் ஜேர்மனியில் காலரா நோய் பரவியபோது ஹோமியோபதி சிகிச்சை உருவானதை நினைவு கூறும் Robert Jütte என்ற மருத்துவ வரலாற்றாளர், வரலாற்றில் எப்போதெல்லாம் அலோபதி மருத்துவம் தவித்து நின்றதோ, அப்போதெல்லாம் மாற்று சிகிச்சை முறைகள் உயர எழுந்ததை மறுக்க இயலாது என்கிறார்.
