ஜேர்மன் அரசாங்கம், சவுதி அரேபியா மீதான ஆயுத ஏற்றுமதி தடையை 2021 இறுதி வரை, அதாவது ஒரு வருடம் நீட்டித்துள்ளது.
ஐரோப்பிய ஒத்துழைப்பு திட்டங்களுக்கான பொருட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை தவிர, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகள், முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை என அனைத்தும் ரத்து செய்யப்படும் என ஜேர்மனி அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வரவிருக்கும் ஆண்டில் ஆயுத ஏற்றுமதிக்கான புதிய அனுமதிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்காது.
ஆனால், முன்பு போலவே மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டாக தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டும் என ஜேர்மனி அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
2018 முதல் நடைமுறையில் உள்ள சவுதி அரேபியா மீதான ஏற்றுமதி தடை ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக மார்ச் 2020 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
ஏமனில் நடந்த போர் மற்றும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை காரணமாக, ஜேர்மனி 2018 முதல் சவுதிக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.