குளிர்காலத்தில் கொரோனாவிலிருந்து தப்ப ஜேர்மன் அரசு விதித்துள்ள எட்டு விதிமுறைகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1154Shares

இந்த குளிர்காலத்தில் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக ஜேர்மன் அரசு எட்டு விதிமுறைகளை விதித்துள்ளது.

குளிர்காலம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கவே விரும்புவார்கள், ஆனால், வீடுகளுக்குள் நிறைய பேர் சேர்ந்திருக்கும்போது கொரோனா பரவுவது எளிது என்பதால், குறைந்த இடத்துக்குள் பலர் சேர்ந்திருப்பதை தவிர்க்குமாறும், வீடுகளின் ஜன்னல் கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மூடிய கட்டிடங்களுக்குள் இருப்பவர்கள், அதாவது அலுவலகங்களில் இருப்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல், மாஸ்க் அணிதல் மற்றும் ஜன்னல் கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைத்திருத்தல் ஆகிய அடிப்படை விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுமானவரை, தனியார் கூடுகைகளை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமூக கூடுகைகள் மற்றும் பொது போக்குவரத்தை தவிர்க்கவும். கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல் மற்றும் மாஸ்க் அணிதலை பின்பற்றவும்.

உடற்பயிற்சி செய்யும்போது ஒன்று அல்லது இருவர் மட்டுமே செய்யவும். தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தவண்ணம் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும், அவர்கள் மருத்துவமனைக்கு போகவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுவாகவே, பயணத்தையும், உறவினர்களை சந்திக்கச் செல்வதையும் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் ஜேர்மனியிலுள்ள ஹொட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள், அத்தியாவசிய மற்றும் சுற்றுலா சாராத காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்