ஜேர்மனியில் ஊரடங்கு எப்போது வரை நீடிக்கும்? அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in ஜேர்மனி
1182Shares

ஜேர்மனியில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முக்கிய அறிவிப்பை கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் கொரோனா பரவல் இன்னும் முற்றிலுமாக குறையவில்லை. அவ்வப்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வதும், குறைந்து காணப்படுவதுமாக உள்ளது.

இதனால் ஜேர்மனியின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் காரணமாக ஊரடங்கில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இது குறித்து ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், நாட்டில் பகுதி நேர ஊரடங்குக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

எனவே, 16 மாகாணங்களில் ஆளுநர்களுடன் கலந்து ஆலோசித்து டிசம்பர் மாதம் வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த 3-ஆம் திகதி முதல் பகுதி நேர ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது.

வரும் வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்