ஜேர்மனியில் கத்தியுடன் ஒருவர் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
ஜேர்மனியின் Oberhausen நகரில், நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
அந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய அந்த நபரும் காயமடைந்ததால் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதலில் தாக்குதலின் நோக்கம் என்ன என தெரியவில்லை என்று கூறிய பொலிசார், பின்னர், அது ஒரு குடும்பத்தகராறு போல் தோன்றுவதாக தெரிவித்தனர்.
அத்துடன், இது தீவிரவாத தாக்குதல் போல் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.