ஜேர்மனியில் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
606Shares

ஜேர்மனியில் சட்ட விரோத கஞ்சா பயிரிடுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கஞ்சா பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியின் Rhineland பகுதியில் மூன்று கஞ்சா பண்ணைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் Euskirchen மற்றும் Herzogenrath என்னும் இரு இடங்களில் கிடைத்த கஞ்சா பயிர்களின் மதிப்பு மட்டுமே 1.5 மில்லியன் யூரோக்களாகும்.

இதுபோக, Titz என்ற இடத்தில் மூன்றாவதாக ஒரு கஞ்சா பண்ணையும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், இந்த ரெய்டுகளின்போது கிடைத்த ஆயுதங்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கு பல நாட்கள் ஆகியுள்ளது.

இந்த ரெய்டுகளில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில் 34 வயதுடைய ஒருவர் ஹங்கேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்