ஜேர்மனியில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா: இன்று கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கிறார் சேன்ஸலர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
593Shares

ஜேர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இன்று கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்க இருக்கிறார் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் நாடான ஜெர்மனி, இம்மாதம் உணவகங்களை மூடுவது, கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் மையங்களை மூடுவது என மீண்டும் முடக்கங்களை இம்மாதம் தொடங்கியது.

என்றாலும் நாளொன்றிற்கு கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து மிக அதிகமாகவே உள்ளது.

ஆகவே, இன்று அனைத்து மாகாண தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல், எடுக்கப்பட இருக்கும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து அவர்களது சம்மதத்தைப் பெற முயற்சி செய்ய இருக்கிறார்.

மெர்க்கல் முன் வைத்துள்ள திட்டத்தின்படி, அனைத்து தனியார் பார்ட்டிகளும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை தடை செய்யப்படும்.

பள்ளிக்கு வெளியே மாணவர்கள் ஒரு நண்பரை மட்டுமே தெரிவுசெய்து, அவருடன் மட்டுமே நேரம் செலவிடலாம்.

வழக்கமாக வகுப்புகளில் இருப்பதைவிட பாதியளவு மாணவர்களைக் கொண்டு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து இருக்கவேண்டும், குழுக்களுக்குள் புதிதாக வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது. அல்லது, பெரிய அறைகளில் வகுப்புகளை நடத்தலாம்.

ஜலதோஷம், இருமல் முதலிய அறிகுறிகளைக்கொண்டவர்கள், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு அல்லது அறிகுறிகள் நீங்கும்வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து இன்று ஏஞ்சலா மாகாண தலைவர்களுடன் பேச இருக்கிறார்.

முதலாவது கொரோனா அலையை நல்லபடியாக சமாளித்த ஜேர்மனியில், இரண்டாவது அலையின்போது கொரோனா நிலைமை மோசமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஜேர்மனியில் 10,824 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆக, மொத்தம் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 801,327.ஜேர்மனியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,547 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்