கொரோனா பரவலை தடுக்க 500 மில்லியன் செலவில் ஜேர்மனி எடுக்கவிருக்கும் முக்கிய நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
442Shares

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 500 மில்லியன் யூரோக்கள் செலவில் ஜேர்மனி புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது.

அந்த தொகை, அரசு அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் காற்றோட்டத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்றுடையவர்கள் தும்மும்போதும், பேசும்போதும் காற்றில் பரவும் கொரோனா கிருமிகள், காற்றிலுள்ள தூசுடன் இணைந்து பரவுகின்றன.

குறைந்தது அவை எட்டு நிமிடங்கள் வரை ஒரு அறையிலுள்ள காற்றில் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குளிர்காலத்தில் மக்கள் அதிக நேரம் மூடிய அறைகளுக்குள் இருக்க விரும்புவதால், கொரோனா அபாயமும் அதிகமாகவே இருக்கிறது.

கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய திட்டத்தின்படி, ஏற்கனவே இருக்கும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன, ஏனென்றால், அவை முழுவதையும் புதிதாக மாற்றவேண்டுமானால் மேலும் அதிக செலவு பிடிக்கும்.

இதற்காக ஒவ்வொரு மேம்படுத்தலுக்கும் குறைந்தபட்சம் 100,000 யூரோக்கள் வரை செலவு பிடிக்கும்.

சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் வசதியில்லாத பள்ளிகளில் காற்றை சுத்தம் செய்யும் கருவிகளை ஏற்பாடு செய்யவும் அரசு விரும்புகிறது.

இதற்கிடையில், எளிதாக, அறைகளில் உள்ள ஜன்னல்களை திறந்துவைப்பதன்மூலம் இதை எந்த அளவுக்கு செயல்படுத்தலாம் என்பதைப் பொருத்தே இத்திட்டம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்