ஜேர்மனியில் வித்தியாசமான காரணத்திற்காக பொலிசாரை அழைத்த பெண்: வீட்டில் அவர்கள் கண்ட காட்சி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
2655Shares

ஜேர்மனியில் ஒரு ராட்சத உயிரினம் தன் வீட்டுக்குள் நுழைவதைக் கண்ட பெண் ஒருவர் பயந்து பொலிசாரை அழைத்தார்.

அது Chinese mitten crab என்னும் ஒரு வகை ராட்சத நண்டு. அது 10 இஞ்ச் நீளம் கொண்டது.

பொதுவாக இவ்வகை நண்டுகள் ஆசியாவில்தான் காணப்படும். என்றாலும், சமீப காலமாக அவை ஜேர்மன் நதிகளில் காணப்படுகின்றன.

அந்த பெண்ணின் வீடு ரைன் நதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஆகவே அது அந்த நதியிலிருந்து வந்திருக்கலாம்.

இதற்கிடையில், பொலிசார் வீட்டுக்கு வந்து சேர, அதற்குள் அந்த பெண் தனது குப்பைக்கூடையை அந்த நண்டின் மீது கவிழ்த்துபோட்டு விட்டு காத்திருந்திருக்கிறார்.

Germany Crab Invader

அதை ஒரு பெட்டியில் அடைத்து அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் பொலிசார்.

வெளிநாடுகளில் இதுபோன்ற காரணத்திற்காக எல்லாம் மக்கள் பொலிசாரை அழைக்கிறார்கள்!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்