ஜேர்மன் ஹொட்டல்களில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
742Shares

ஜேர்மனிக்குள்ளேயே கொரோனா அபாயம் உள்ள இடங்களிலிருந்து வருவோருக்கு ஹொட்டல்களில் தங்க இனி அனுமதி கிடையாது.

ஜேர்மனியில் இருப்பவர்களே அவர்கள் கொரோனா அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களானால் இனி உள்ளூர் ஹொட்டல்களில் தங்க அவர்களுக்கு அனுமதியளிப்பதில்லை என அனைத்து ஜேர்மன் மாகாணங்களும் முடிவு செய்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜேர்மன் மாகாணங்களில் பாதி மாகாணங்களில் விரைவில் இரண்டு வாரங்களுக்கு பள்ளி விடுமுறைகள் விடப்பட உள்ளன.

அப்படியானால், உதாரணத்திற்கு பெர்லினில் வசிப்போர் தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால் மட்டுமே விடுமுறை எடுத்துக்கொள்ளமுடியும்.

கடந்த இரு மாதங்களாக ஜேர்மனியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

பெர்லின் கடந்த செவ்வாயன்றே உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை இரவு வெகு நேரம் திறந்துவைக்க தடை விதித்தாயிற்று.

கடந்த ஏழு நாட்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 100,000 பேரில் 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியிருக்குமானால், அந்த பகுதிக்கோ, அந்த பகுதியிலிருந்தோ அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய, குடிமக்கள் பயனம் செய்வதை தவிர்க்கவேண்டும் என அமைச்சர்கள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட தங்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழைக் காட்டினால் மட்டுமே இரவு தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்