நிலைமை மிகவும் கவலையளிக்கிறது! நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பில் ஜேர்மனி முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in ஜேர்மனி

சுகாதார மற்றும் சமூக இடைவெளி விதிகளை மக்கள் கடைப்பிடிக்காவிட்டால் நாளொன்றுக்கு 10,000 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகும் என்று முன்னணி சுகாதார அதிகாரி எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலைமை என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. அடுத்த சில வாரங்களில் நிலைமை எப்படி மாறும் என்று எங்களுக்குத் தெரியாது என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் நிறுவனத்தின் (ஆர்.கே.ஐ) தலைவர் லோதர் வைலர் கூறினார்.

ஒரு நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும், ஜேர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடில்லாமல் பரவ வாய்ப்புள்ளது.

தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக ஜேர்மனி அறிவித்துள்ளது, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 4,058 ஆக பதிவாகிள்ளது.

இந்த எண்ணிக்கை பல ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருந்தாலும், ஜேர்மனியில் ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான தினசரி வழக்கு எண்ணிகையில் இதுவே அதிகமாகும்.

இந்த அதிகரிப்பு கவலை அளிப்பதாக ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் விவரித்தார், ஜேர்மனியர்கள் நிம்மதி அடையக்கூடாது என்று கூறினார்.

கொரோனா நெருக்கடியிலிருந்து ஜேர்மனியை தற்போது வரை பாதுகாத்து வந்தது குடிமக்கள் தான். இந்த சாதனையை நாம் பாழாக்கக்கூடாது என ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்