நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தான பகுதிகளின் பட்டியலை ஜேர்மனி விரிவுப்படுத்தியுள்ளது.
ஜோர்டான், ருமேனியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் ஜேர்மனி சேர்த்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்கள் கொரோனா வைரஸ் இல்லை என சோதனையில் உறுதியாகும் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, நெதர்லாந்து, பல்கேரியா, குரோஷியா, லிதுவேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய சில பகுதிகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில், புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மொத்தம் 2,828 புதிய வழக்குகள் புதன்கிழமை பதிவாகியுள்ளன.
ஜேர்மனி தலைநகரம் உட்பட பல பெரிய ஜேர்மன் நகரங்களில் எண்ணிக்கையை கடுமையாக அதிகரித்து வருகிறது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் கூறினார்.