பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனி வருவோர்க்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
672Shares

பிரித்தானிய குடிமக்களின் சர்வதேச பயணத்திற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.

வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து ஜேர்மனிக்கு வருவோர் ஜேர்மனிக்குள் நுழைந்ததும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், வட கிழக்கு, வட மேற்கு பகுதிகள், யார்க்‌ஷையர் மற்றும் ஹம்பர் ஆகிய பகுதிகளிலிருந்து ஜேர்மனிக்கு வருவோருக்கு தனிமைப்படுத்தல் உண்டு.

அதேபோல், பிரித்தானியாவின் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பிய சுற்றுலாப்பயணிகளுக்கும் இதே விதி பொருந்தும்.

வட அயர்லாந்தும் வேல்ஸும் ஏற்கனவே ஜேர்மனியின் அதிக அபாய பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வெளியுறவு அலுவலகமும் (FCDO), நீங்கள் ஜேர்மனிக்கு செல்வதற்கு இரண்டு வாரங்கள் முன் பிரித்தானியாவிலுள்ள இந்த அதிக அபாய பகுதிகளுக்கு சென்றிருந்தால், நீங்கள் ஜேர்மனிக்குள் நுழைந்ததும், நேரடியாக நீங்கள் தங்கும் இடத்திற்கு சென்று 14 நாட்கள் அல்லது கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் வரை உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்