ஜேர்மனியின் மறு ஒருங்கிணைப்பு தினத்தின் 30-வது ஆண்டு விழாவிற்கு கட்டுப்பாடுகளை விடுத்த கொரோனா!

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
143Shares

கொரோனா நெருக்கடி காரணமாக ஜேர்மனியின் மறு ஒருங்கிணைப்பின் 30வது ஆண்டு விழா கொண்டாட்டத்தினை அந்நாடு குறைந்துகொண்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா நெருக்கடி காரணமாக பல்வேறு நிகழ்வுகள் ரத்தாகியுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக, கிழக்கு ஜேர்மனி, பெர்லின் சுவரை தகர்த்து மேற்கு ஜேர்மனியுடன் ஒன்றிணைந்த தினத்தின் முப்பதாவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை கொரோனா நெருக்கடி காரணமாக அந்நாடு குறைத்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியன் ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜேர்மனி, சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் தொடக்கமாக 1990 ஒக்டோபர் 3 அன்று பெர்லின் சுவரை வீழ்த்தி மேற்கு ஜேர்மனியுடன் ஒன்றிணைந்தது.

கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்த அதிபர் அங்கேலா மேர்க்கெல் இவ்வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்று நிகழ்வினை நினைவுகூர்ந்தார்.

ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக இதற்கான விழாக்களை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது ஒரே பிராந்தியமாக இருக்கும் ஜேர்மனியில், அனைவரின் வாழ்க்கை நிலைமையும் ஒரே மாதிரியாக மாறியுள்ளது.

இது கடந்த 30 ஆண்டுக்கால உழைப்பின் மூலமே சாத்தியமானது என்றும், ஆனால் இரு பகுதிகளின் கட்டமைப்புகளில் மாற்றம் அவசியமாகிறது என்றும் மேர்க்கெல் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்