பல நாடுகள் அகதிகளை ஏற்க மறுக்கும் நிலையில் ஜேர்மனியில் அகதிகளை ஏற்கக் கோரி பேரணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பல நாடுகள் அகதிகளை ஏற்க மறுக்கின்றன, சில எதிர்க்கின்றன, மீறி வருவோர் கைது செய்யப்படுகின்றனர், நாடு கடத்தப்படுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழல் பல நாடுகளில் நிலவும் நிலையில், ஜேர்மனியில் 5,000 பேர் கூடி, அகதிகளை வரவேற்கவேண்டும், தடுக்கக்கூடாது என்பதற்காக பேரணி நடத்தினர்.

குறிப்பாக கிரீஸில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமில் தீப்பற்றியதையடுத்து பலர் வீடிழந்தவர்கள் ஆகியுள்ளனர்.

கடந்த வாரம் அவர்களில் 1,500 பேரை அதாவது 408 குடும்பங்களை ஏற்றுக்கொள்வதாக ஜேர்மனி அறிவித்தது.

ஆனால், அது போதாது, நம் நாட்டில் போதுமான இடம் இருக்கிறது, யாரையும் கிரீஸில் விட்டுவிடக்கூடாது அனைவரையும் ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரி பெர்லினில் 5,000 பேர் வரை பேரணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் பெர்லினைப்போலவே, கொலோன், முனிச், லீப்சிக் ஆகிய நகரங்களிலும் மக்கள் பேரணிகளை நடத்தினர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்