கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன் மதுபான விடுதியில் ஊழியர்கள் பலருக்கு முத்தமிட்ட பெண்ணுக்கு சிறை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தும், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, முடிவுகள் வரும் முன்னரே மதுபான விடுதிகள் பலவற்றிற்கு சென்றுள்ளார் இளம்பெண் ஒருவர்.

ஜேர்மனியில், விடுமுறையின்போது அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றும் ப்ளோரிடாவைச் சேர்ந்த Yasmin Adli (26)க்கு, உடல் நலம் குன்றி வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே ஜேர்மனியின் Garmisch-Partenkirchen பகுதியிலுள்ள பல மதுபான விடுதிகளில் பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

தற்போது Yasminஉடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் ஒருவர், மதுபான விடுதிக்கு வந்திருந்தபோது Yasmin உடல் நலமில்லாத நிலையிலும் பணியாளர்கள் பலருக்கு முத்தமிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில், தனிமைப்படுத்தலை மீறினாலே 2,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், மற்றவர்களை கொரோனா தொற்றும் அபாயத்திற்குள்ளாக்கியுள்ளதோடு, தொழில் பாதிப்பை ஏற்படுத்தி, அதனால் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளார் Yasmin.

ஆகவே, Yasminக்கு ஜேர்மனியில் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Garmisch-Partenkirchen நகரில், சமீபத்தில் 59பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. அவர்களில் 25 பேர் Yasmin பணியாற்றும் அதே விடுதியில் பணி செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்