ஜேர்மனியில் ஹிட்லரின் புகைப்படத்தால் 29 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதாக கூறி 29 காவல்துறை அதிகாரிகள் இன்று கடமையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுமார் 200 பொலிசார் விசாரணையில் களமிறக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் கூறியுள்ளார்.

ஜேர்மனியின் அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் மொத்தம் 34 காவல் நிலையங்கள் மற்றும் 11 சந்தேக நபர்களுக்கு தொடர்புடைய தனிப்பட்ட இல்லங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரத்தில் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் 100-கும் மேற்பட்ட ஹிட்லர் மற்றும் நாஜிகள் தொடர்புடைய புகைப்படங்களை தாங்கள் உறுப்பினர்களாக கொண்ட குழுக்களில் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 29 பொலிஸ் அதிகாரிகளும் இன வெறுப்பைத் தூண்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும்,

மட்டுமின்றி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்